ஈரோடு சூலை 1:
தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் அட்டைக்கு பொருள் வாங்குவதை உறுதி செய்ய, பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கைரேகை பதிவு தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் பயோ மெட்ரிக் முறையில் கை ரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் ரேஷன் வாங்க வந்த அட்டைதாரர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் பெறும்பாலான கடைகள் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே