ஈரோடு அக் 2:

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி சார்பில்  சிறுவர்களுக்கான மிதிவண்டி பேரணி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரப்பன்பாளையம் பிரிவு பகுதியில் இருந்து சம்பத் நகர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றுகளும் வழங்கப்பட்டன.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/