பவானிசாகர் நவ 30:
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இப்பயிற்சி நிலையத்தில் அரசு அலுவலர்கள், இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு துறைரீதியான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக பயிற்சி நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் 50 சதவீத ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், பயிற்சி நிலையத்தில் முழு அளவான 685 பயிற்சியாளர்களுக்கு (100 சதவீதம்) அடிப்படை பயிற்சி வழங்கலாம். மேலும் மதிப்பூதியத்தில் 9 கூடுதல் விரிவுரையாளர்களை நியமித்து பயிற்சி வகுப்புகளை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnskill.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/