ஈரோடு அக் 27:
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 6 ம் தேதி 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று தொடர்ந்து 21-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து உள்ளது. அணைக்கு 4409 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி, பவானி ஆற்றுக்கு 1,900 கன அடி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 200 கன அடி என மொத்தம் 4,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/