பவானிசாகர் ஆக 30: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற புகழை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியான வட கேரளம் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ‌ பவானிசாகர் அணை 29 வது முறையாக 100 அடியை எட்டியது.

இதனையடுத்து வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.இதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது பின்னர் ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரை உடைப்பு காரணமாக, கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பவானி அணையில் இருந்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர் தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் தற்போது 102 அடியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே முழுவதுமாக உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மாலை பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தலின்படி வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் பவானிசாகர் அணை எந்த நேரமும் 102 அடி கொள்ளளவை எட்டும் எனவும், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் எனவும் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணை 120 அடியை எட்டி உள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து 2800 கனஅடி நீரை உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதி செல்லுமாறும் பொதுப்பணித்துறையினர் அறிவுறித்தியுள்ளனர்.மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் நீர் இருப்பு 30.1 டி.எம்.சி., ஆகவும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் பவானி ஆற்றில் 2300 கன அடி நீர் என மொத்தம் 2800 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/