ஈரோடு அக் 27:
ஈரோடு பெருந்துறை சாலை பரிமளம் மஹாலில் நாளை 27ம் தேதி அனைத்து வங்கிகள் சார்பில் வங்கிகள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.
மத்திய அரசின் நிதி, பொருளாதார சேவைகள் துறை வழிகாட்டுதல்படி ஈரோடு மாவட்ட அளவிலான வங்கிகள் குழு அதன் உறுப்பினராக உள்ள அனைத்து வங்கிகள் சார்பில் 27 ம் தேதி வங்கிகள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியை முன்னோடி வங்கியான கனரா வங்கி ஒருங்கிணைக்கிறது.
கனரா வங்கி, எஸ்.பி.ஐ, ஐ.ஓ.பி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் பங்கேற்று வீட்டு கடன், வாகன கடன், கல்வி கடன், வேளாண் கடன், தொழில் கடன், தனி நபர் கடன், அதற்கான வட்டி, அரசின் மானிய விபரம் போன்றவைகளை விளக்க உள்ளனர். தவிர, இதுபற்றிய கண்காட்சியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி துவக்கி வைக்கிறார். ஈரோடு எம்.பி, கணேசமூர்த்தி, ஈரோடு எம்.எல்.ஏ, திருமகன் ஈவெரா, கனரா வங்கியின் சென்னை சரக முதன்மை பொது மேலாளர் பழனிசாமி ஆகியோர் பேசுகின்றனர். https://www.erode.nic.in , https://www.iba.org.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/