ஈரோடு அக் 28:

ஈரோட்டில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமற்றும் உறுப்பினர் வங்கிகள் சார்பில் வங்கிகள் சங்கமம் என்ற பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து பேசியதாவது:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகள், வாகன போக்குவரத்து நிறுத்தம் என பலவற்றால் சிறு, குறு தொழில்கள் பாதித்தன. தற்போது பல்வேறு தளர்வுகளால் மீண்டும் அவர்கள் மீண்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செயல்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம், அவர்களது தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிதாக தொழில் துவங்கவும், கடனுதவிகள் தேவைப்படுகிறது. அவ்வாறான கடனை பெற, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும், என கேட்டு கொண்டார்.

பல்வேறு வங்கிகள், தாட்கோ, சிட்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில் புதியதொழில் வாய்ப்புகள், கடனுதவி, மானியங்கள் குறித்த கண்காட்சி அமைத்திருந்தனர். 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா உட்பட பலர் பங்கேற்றனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/