ஈரோடு, அக்.27:

ஈரோடு பி.பி.அக்ரகாரத்தில் உள்ள கிறிஸ்து ஜோதி பள்ளியில் கொரோனா சிறப்பு இலவச மையத்தை ஒளிரும் ஈரோடு அமைப்பு நடத்தியது. இங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் கிறிஸ்து ஜோதி மருத்துவமனை சார்பில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கோவை, ராமநாதபுரம் மறை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் நரிக்குழி தலைமை தாங்கினார். சாந்தோம் சமூக சேவை மையத்தின் செயலாளர் அருட்தந்தை ஜியோ குன்னத்து பரம்பில், பங்குதந்தையர்கள் ஜோபி தெக்கிநேமத், நிதின் பாலக்காடு, அகஸ்டின் சிரியன் கண்டத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருட்சகோதரிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

டாக்டர் நவீன்குமார், கொரோனா பாதித்தவர்கள் நோய்க்கு பின் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 100 பேருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்துஜோதி மருத்துவமனை மேலாளர் அருட்சகோதரி அமலா வரவேற்றார். முடிவில் பள்ளிக்கூட உதவி தலைமைஆசிரியை அருட்சகோதரி மேரி ரபேல் நன்றி கூறினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/