கவுந்தப்பாடி ஆக 16:

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக, ‘காக்கும் கரங்கள்’ என்ற பெயரில் குழு அமைத்து ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன்படி, கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், எஸ்.பி., வி.சசிமோகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 130 பெண்கள் மற்றும் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். கோபி டி.எஸ்.பி., ஆறுமுகம், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today