மொடக்குறிச்சி சூலை 14:

மொடக்குறிச்சி யூனியனில் வளர்ச்சி பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு உள்ளிட்டவைகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் வந்த கலெக்டர், வருகை பதிவேடு, பகிர்மான பதிவேடு, அஞ்சல் வில்லை கணக்கு பதிவு போன்ற கோப்புகளை ஆய்வு செய்தார். யூனியன் அளவில் ரூ.7.93 கோடி மதிப்பில் நடந்து வரும் சாலை, கொட்டகைகள் அமைப்பு, குடிநீர் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவற்றை தரமாக விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு வழங்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் 14 பணிகளில் முடிக்கப்பட்ட ஐந்து பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தை ஆய்வு செய்தார். பசுமை வீடு திட்டப்பணி, 44 லட்சம் ரூபாயில் நடக்கும் 21 பசுமை வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டு அவ்வீட்டுக்கு உரிய பயனாளியிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்த அவர், அங்குள்ள மருந்து, மாத்திரைகள் இருப்பு, தங்கி உள்ள நோயாளிகளின் சிகிச்சை விபரங்கள் கேட்டறிந்தார். அங்கிருந்துவர்களிடம் குறைகள் கேட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான தேவைகள் குறித்து கேட்டார்.வருவாய் வட்டாச்சியர் சங்கர்கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வருவாய் வட்டாச்சியர் செந்தில்ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, ரமேஷ், வட்டார உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், பாண்டியராஜன், பேரூராட்சி செயல் அலுவலக சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today