ஈரோடு ஆக 14:

ஆடி வெள்ளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பண்ணாரி அம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து பெரிய கோவில்களிலும் நேற்று பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி  வழங்க வேண்டும். வரும், 23 வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் இக்கட்டுப்பாடு தொடர்கிறது. அத்துடன் காவிரி ஆறு, கூடுதல் காவிரி – பவானி ஆறு, கொடிவேரி அணை, பவானிசாகர் அணை மற்றும் பூங்கா போன்ற சுற்றுலா தலங்களிலும், நீர் நிலைகளிலும் பக்தர்கள் குளிக்கவும், சுற்றுலா பயணிகளாக வந்து செல்லவும் தடை விதித்துள்ளனர். இருப்பினும், கோவிலுக்கு வெளியே வந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதுபோல, அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகைக்கு அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலில் உள்ளவர்கள் மட்டும் தொழுகையில் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today