ஈரோடு நவ 11:
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 18ம் மற்றும் 19ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு அருகே உள்ள 46 புதூரில் உள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
வருகிற 17ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரமும் வருகிற 18ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 9442265651 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். https://www.cpe.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/