ஈரோடு டிச 16:

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடக்க உள்ளது.

இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்ட கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளை ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ, மற்றும் கிக் பாக்ஸிங் அசோசியேசன் தலைவருமான திருமகன் ஈவெரா வாழ்த்தி வழியனுப்பினார்.

உடன் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட கிக் பாக்ஸிங் செயலாளர்  யூசுப், சென்சாய் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். https://www.sdat.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today