பெருந்துறை மே 29:அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில், பெருந்துறை ஒன்றிய கிராமங்களில் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நேற்று துவங்கியது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கை விளைவாக, மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டி, நீர் ஆதாரத்தை உருவாக்கி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 1,652 கோடி ரூபாயில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் வகுக்கப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், இதற்கான பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகிறது.இந்நிலையில், பெருந்துறை ஒன்றியம், சுள்ளிப்பாளையம் கிராமத்தில், நீர் நிலைகளில் நீர் செறிவூட்டும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திங்களூர் அருகே, போலநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு – அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து சுள்ளிப்பாளையம் வரை, குழாய் பதிக்கும் பணி நேற்று துவங்கியது.
நிருபர்.
ஈரோடு டுடே