ஈரோடு நவ 30:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் – வளர்ச்சி ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், உதவி ஆணையர் – கலால் – ஜெயராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் ஆகியோர் மனுக்கள் பெற்றனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/