ஈரோடு சூலை 25:

கொரோனா தொற்றால் இறந்த தமிழ்நாடு கட்டுமான தொழலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் விபரம் சேகரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவர்களது குழந்தைகளின் எதிர்காலம், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அக்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க ஏதுவாக, நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்துதல், திட்டத்தை செயலாக்கம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கிறது. எனவே கட்டுமான தொழிலாளர் ஒருவர் அல்லது தாய், தந்தையர் என இருவரும் கொரோனாவால் இறந்திருந்தால், அவர்களது விபரம் சேகரிக்கப்படுகிறது. ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தகவலை தெரிவிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் சு.காயத்திரி கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today