ஈரோடு ஆக 7:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி ஈரோட்டில் இன்று கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தி.மு.க., ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு இன்று 7ம் தேதி ஈரோடு மாநகரத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வீதியிலும், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும், ஊராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு ஊர்கிளையிலும், கருணாநிதி படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
காலை 9 மணிக்கு தி.மு.க., துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலைக்கு துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், ஊர்கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today