ஈரோடு சூலை 10:

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான சுயமுன்னேற்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி முகாம் வருகின்ற 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை 13 நாட்களுக்கு ஈரோடு கொல்லம்பாளையம், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் வசிப்பவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றும், பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 8778323213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today