ஈரோடு நவ 8:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் அரசு மற்றும் போலீஸ் வழக்குகளில் ஆஜராகும் அரசு வக்கீல்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்ட செசன்சு கோர்ட்டு அரசு குற்றத்துறை வக்கீலாக (பப்ளிக் பிராசிக்கியூட்டர்) வக்கீல் அருட்செல்வன் நியமிக்கப்பட்டு உள்ளார். அரசு உரிமையில் வக்கீலாக (கவர்ன்மென்ட் பிளீடர்) வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் வக்கீல்களாக சிவகுமார், ஆனந்த், திருமலை (பெருந்துறை), விஜயகுமார் (பவானி), சிவசண்முகம்(கோபி), ரமேஷ் (சத்தியமங்கலம்), குமரேசன் (ஈரோடு சப்-கோர்ட்டு), சிறப்பு அரசு வக்கீலாக ஜெயந்தி (ஈரோடு மகளிர் கோர்ட்டு), கூடுதல் அரசு வக்கீல்களாக சதீஸ்குமார் (2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு -விரைவு நீதிமன்றம், ஈரோடு.), வெற்றிவேல் (கோபி விரைவு கோர்ட்டு), பரணீதரன் (பவானி), பாலு (பெருந்துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல அரசு சிவில் வக்கீல்களாக கோவிந்தசாமி (பவானி), பார்த்திபன் (சத்தியமங்கலம்), பாஸ்கரன் (கோபி), குணசேகரன்(அந்தியூர்) உள்ளிட்டோரை தமிழக அரசின் உள்துறை செயலாளர் பிரபாகர் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். https://www.districts.ecourts.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/