ஈரோடு ஜூன் 15: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு இடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இன்னும் சில நாளில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும்.

இவருக்கு பதிலாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி உதவி கலெக்டராக பணி செய்த எஸ்.பிரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.