ஈரோடு நவ 16:

தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்களுக்காக 2019 – 2020ம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு ஒன்றிய அரசால் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

2019-2020ம் ஆண்டுக்கான விருது பெற 1.1.2021 அன்று 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இளைஞர் நலன், சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, கலாசாரம், மனித உரிமை மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், சிறந்த குடிமக்கள், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்த சிறந்தவர்கள் மற்றும் கற்றலில் சிறந்தவர்கள் ஆகியோர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

https://innovate.mygov.in/national-youth-award-2020 என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்கள் நேரடியாக வருகின்ற 17ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்றடைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் தனி நபருக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.1 லட்சமும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.sdat.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/