ஈரோடு சூலை 11:
தமிழகத்தில் கலை பண்புகளை மேம்படுத்தி, பாதுகாக்கும் நபர்களுக்கு கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலம் ஆண்டு தோறும், ஐந்து கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது. ஈரோடு மாவட்ட அளவில் இசை, நாட்டியம், ஓவியம், நாட்டுப்புற கலைகள், நாடகம், கருவி இசையில் சாதனை படைத்த கலைஞர்களில் 18 வயதும் அதற்கு உட்பட்டோருக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு, கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி என விருது வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட கலைஞர்கள் விருது பெற தங்கள் சுய விபர குறிப்புடன் வயது, பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு புகைப்படம் இணைத்து உரிய சான்றுடன், உதவி இயக்குனர், கலை பண்பாட்டு துறை மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோவை 641 050 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே