ஈரோடு டிச 14:
தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 1ம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்புவரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ-மாணவிகள் 2021 – -2022ம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ்(புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை (15ம் தேதி) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today