ஈரோடு சூலை 28:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஈரோடு மண்டல இணை பதிவாளர் க.பாண்டியன் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பில் கூறியது: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, முழு விபரத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து, ஆதார் அட்டை நகல், பான் கார்டு நகல், 100 ரூபாய் பங்குத்தொகை, பத்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி, நேரில் அல்லது தபால் மூலம் உறுப்பினராகலாம். தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினால், பங்குத்தொகை, நுழைவு கட்டணத்தை மணியார்டர் மூலம் அனுப்பிலாம். இம்மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினராகி கடன் சங்க சேவை, கடன்களை பெறலாம். இவ்வாறு மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today