ஈரோடு ஆக 16:

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி, தலைவர் எஸ்.சின்னசாமி மனு வழங்கினார். அம்மனுவில் கூறியது: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி துறை, மருத்துவ துறை, தொழிலாளர் துறை, வேளாண்மை பண்ணை என பலதுறைகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் பணி செய்கின்றனர்.

2020–21ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருள் விலை உயர்வு அடிப்படையில் நடப்பாண்டுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டதுபோல, அறிவித்து வழங்க வேண்டும். உள்ளாட்சி பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்துக்கு இணையாக, மருத்துவத்துறை பணியாளர்களுக்கும் நடப்பாண்டுக்கு ஏற்ப நிர்ணயித்து அமலாக்க வேண்டும். கலெக்டரால் நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி நகராட்சியிலும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் அமலாக்கவில்லை.

இதுனால், பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, குறைந்த பட்ச ஊதியத்தை முன்தேதியிட்ட அமல்படுத்தி, நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். இவ்வாறு கேட்டு கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today