ஈரோடு நவ 24:

ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம் அணைப்பகுதியில் பிரமாண்டமான கிணற்றில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அனுமதியை ரத்து செய்யக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், குண்டேரிபள்ளம் அணை பகுதியில் வினோபா நகர், தோப்பூர், கோவிலுார், கவுண்டம்பாளையம், கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, எலுார் உட்பட பல கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் மனு வழங்கி கூறியது.

குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் 150 குடும்பமும், அதனை சுற்றி, 7,000 குடும்பங்கள் வசிக்கிறோம். அப்பகுதியில் சிலர் பெரிய கிணறு தோண்டி, பிரமண்டமான குழாய் மூலம், அதிக மின் திறன் கொண்ட மின் மோட்டரால் தினமும் 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இந்நீரை வணிக நோக்கில் விற்பனை செய்வதாக அறிந்தோம். இதற்கு கோபி ஆர்.டி.ஓ., அனுமதி வழங்கி உள்ளார். அப்பகுதியில் உள்ள மக்கள், குறைந்த அடி ஆழத்துடன் போர்வெல், கிணறு அமைத்து வீட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.

தினமும், 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சினால், இதுபோன்றவை முற்றிலும் துார்ந்து வாழ்வாதாரம் பாதிக்கும். இதை கண்டித்து பல போராட்டம் நடத்தினோம். கடந்த, 2019 பிப்ரவரி மாதம் 21ம் தேதி அத்திட்ட அனுமதியை ஆர்.டி.ஓ., ரத்து செய்தார். நீதிமன்றம் மூலம், சில ஆணை பெற்றுள்ளதாக கூறி, தண்ணீர் எடுக்கின்றனர். இதற்கு பல அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அத்திட்ட அனுமதியை முற்றிலும் ரத்து செய்து, தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும், என்றனர்.  https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/