ஈரோடு ஆக 10:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாநில பண்டாரகுல முன்னேற்ற நல அறக்கட்டளை சார்பில் மாநில தலைவர் கே.பழனிசாமி உட்பட பலர் சேர்ந்து, மனு வழங்கினர். அவர்கள் மனுவில் கூறியதாவது: நாங்கள் ஆண்டி, பண்டாரம், ஜங்கம், யோகீஸ்வரர், ஜோகி என தமிழகம் முழுவதும் 45 லட்சம் பேர் சமூகமாக வசிக்கிறோம். தற்போது குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இதன் மூலம், பண்டார குல சமுதாய மக்கள், இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும். முன்னேற்றம் தடைபடும். மேலும் 146 பிற்படுத்தப்பட்டோர், 115 மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் இன்னும் பல சமுதாய மக்கள் வாழ்கின்றனர். பண்டார குல மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு சரியான விகிதாச்சார அடிப்படையில் இல்லாததால் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today