ஈரோடு செப் 15:

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 – வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கும் உருவ படத்திற்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அண்ணா, -பெரியார் நினைவகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ., பிரேமலதா, தாசில்தார் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.* ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில விவசாய அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, குறிஞ்சி சிவகுமார், வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவை தலைவர் குமார் முருகேஷ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், செல்ல பொன்னி மனோகரன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், பகுதி செயலாளர்கள் செல்வராஜ், ராமச்சந்திரன், லோக சந்திரன், மருத்துவர் அணி டாக்டர் விவேக், தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால்,

முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ம.தி.மு.க., சார்பில் கணேசமூர்த்தி எம்.பி., தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு, முசிறி சந்திரன், முகமது சாதிக், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மயில் துரையன், குணசேகரன், கந்தசாமி, ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/