ஈரோடு ஆக 17:

நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் மாநில செயலாளர் சின்னசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைவர் பெரியசாமி, மாநில பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் பேசினர்.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைய வழி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் சமர்பித்தல் ஆகியவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.

நலவாரிய பதிவை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். நலவாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூவதியம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு மாவட்ட செயலாளர்க்ள கந்தசாமி, சுந்தரம், மாவட்ட பொருளாளர்கள் குணசேகரன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today