ஈரோடு சூலை 5:

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு தலைமையில் இலவச மின்சாரம் கேட்டு நடத்திய போராட்டத்தில், 48 விவசாயிகள் உயிர் நீத்தனர்.

உயிர் நீத்த 48 விவசாயிகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் பேரணி, அஞ்சலி ஆகியவை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பேரணி நடத்தப்படவில்லை.

இதையடுத்து ஈரோடு அடுத்துள்ள கங்காபுரத்தை சேர்ந்த உயிர்நீத்த விவசாயி துளசிமணி நினைவு ஸ்தூபி முன்பாக நேற்று தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today