ஈரோடு டிச 10:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் விளையாடும் வகையில் 52 பூங்காக்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு வ.உ.சி., பூங்கா உள்ளிட்ட பெரிய அளவில் உள்ள பூங்காக்கள் டெண்டர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு சில பூங்காக்கள் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடனும், மற்ற பூங்காக்கள் மாநகராட்சி நேரடியாகவும் பராமரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 30 புதிய பூங்காக்கள் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வில்லரசம்பட்டியில் புதியதாக பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூங்கா தேவைப்படும் இடங்களை பொதுமக்கள் தெரிவித்தால் அதற்கு ஏற்ப புதியதாக பூங்காக்கள் அமைத்துக்கொடுக்க மாநகராட்சி தயார்நிலையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnurantree.tn.gov.in