ஈரோடு சூலை 23:
ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 தவணைகளில் ரூ.286 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்து திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி ஈரோடு மாவட்டத்தில் ரூ.286.29 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 15 ஆயிரத்து 273 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.142.78 கோடி நிதி வழங்கப்பட்டது. 2ம் தவணையாக கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி, ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 25 ஆயிரத்து 353 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணைகளாக கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.286.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today