ஈரோடு டிச 11:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் லி. மதுபாலன் தலைமையில் மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்திய அரசமைப்பு சட்டம், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பட்ட மனித உரிமைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கோ.குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.  https://www.en.unesco.org

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today