ஈரோடு நவ 16:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு மாபெரும் தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.தமிழகத்தில் இதுவரை 7 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் 7 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்தி  கொண்டுள்ளனர். இந்நிலையில் 8 -வது கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் இரண்டு நாட்களில் 883 மையங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. இதைப்போல் மாநகர் பகுதிகளில் 50 இடங்களில் தடுப்பூசி முகாம் இரண்டு  நாட்கள் போடப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த முகாமில் மொத்தம் 50 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மாநகர் பகுதியில் மொத்தம் இரண்டு நாட்களிலும் சேர்த்து 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/