ஈரோடு சூலை 18:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை மித்ராவுக்கு அரிய வகை மரபணு நோய் பாதித்துள்ளது. இக்குழந்தையை நோயை சரி செய்ய வெளிநாட்டில் இருந்து அரிய வகை மருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இம்மருந்துக்கு இந்திய அரசு ரூ.6 கோடி கலால் வரி விதித்துள்ளது. அக்குழந்தையின் குடும்பத்தினர் இத்தொகையை செலுத்தி மருந்தை பெரும் சூழலில் இல்லை. இதனால், கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தினர். அதுபோல இந்த வரியை ரத்து செய்ய கோரி நாமக்கல் கொ.ம.தே.க., எம்.பி., சின்ராஜ், மத்திய தொழில் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் போன்றோருக்கு கடிதம் அனுப்பினார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் கடிதம் அனுப்பினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இம்மருந்தை வரவழைக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எம்.பி., சின்ராஜ் முயற்சியால் ரூ.ஆறு கோடி கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு குழந்தைக்கு பயன் கிடைக்கப்போகிறது. இந்த வரி விலக்கு வழங்கிய பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு எம்.பி., சின்ராஜ் சார்பிலும் கொ.ம.தே.க., சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today