ஈரோடு நவ 8:

தொடர் மழையால் தக்காளி வரத்து சரிந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு விற்பனையானது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தாளவாடி, ஈரோடு, நாமக்கல் என பல பகுதிகளில் இருந்து தக்காளி வரத்தாகும். தீபாவளிக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40க்கும், தீபாவளியின்போது ரூ.60 க்கும் விற்பனையானது.

கடந்த ஒரு வாரமாக தொடர் மழையால் தாக்காளி வீணானதுடன் தீபாவளிக்காக கடந்த சில நாளாக அதிகமாக தக்காளியை பறிக்காததாலும் வரத்து குறைந்தது. தவிர வரும் வாரம் முகூர்த்த சீசன் துவங்குவதால் தக்காளி வரத்து சரிந்துள்ளது.

இதனால் ஈரோடு மார்க்கெட்டில் நேற்று தக்காளி விலை மொத்த மற்றும் சில்லறை வியாபாரமாக ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு விற்பனையானது. கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.550 முதல் ரூ.600க்கு விற்பனையானது. நேற்று, ரூ.900 முதல் ரூ.1,200 க்கு விற்பனையானது. https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/