சத்தியமங்கலம் ஆக 10:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து சென்று கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக –- கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் காரப்பள்ளம் அருகே சாலை ஓரத்தில் உள்ள வனக்குட்டையில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துகொண்டு நீண்ட நேரம் விளையாடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளை யானைகளை தொந்தரவு செய்யால் செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today