ஈரோடு ஆக 30: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

இரண்டாம் அலையில் குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா வயது பேதமின்றி தாக்கியது.நாளுக்கு நாள் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

மேலும் உயிரிழப்பும் அதிக அளவில் இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இதன் காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. பின்னர் மீண்டும் திடீரென பாதிப்பு அதிகமாகத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்குள் அடைக்கப்பட்டன.

இது போன்ற நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.  இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினம் பாதிப்பை விட சற்று அதிகம்.இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 98 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 148 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர்.இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 1,453 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.
https://www.erode.today/