ஈரோடு ஆக 17:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இலவச வீடு கேட்டு தொடர்ந்து 4 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அம்மாபேட்டை பாரதியார் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி.

இதேபோல், இவரது மனைவி, 2 மகள்களும் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வீடு கட்டி தரக்கோரி மனு அளித்துள்ளார். இந்நிலையில், நேற்றும் சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், நான் அன்றாடும் கூலி தொழில் செய்து குழந்தைகளை கவனித்து வருகிறேன். நானும், எனது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வாய் பேச முடியாதவர்கள் என்பதால் வாழ்க்கை நடத்துவதில் மிகுந்த சிரமப்படுகிறோம்.

எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. வாடகை வீடு வழங்கவும் தயங்குகின்றனர். எனவே, எங்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். எனது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை காக்க தேவையான உதவிகள் செய்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today