ஈரோடு ஜூன் 5: ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கை செய்கின்னர்.இ–பாஸ், இ–பதிவு இன்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கின்றனர். இருவருக்கு மேல் மூவராக டூவீலரில் வந்தால் அதற்கு தனியாக வழக்குப்பதிவு செய்கின்றனர்.ஊரடங்கின் 12-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 275 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 35 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 875 இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதலானது.நேற்று மட்டும் ரூ.4.10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.மாவட்ட எல்லையில், அனுமதி இன்றி ஈரோடு மாவட்டத்துக்கு வந்தவர்களை மீண்டும் திரும்ப அனுப்பினர். அவ்வாறாக, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டது.
நிருபர்.
ஈரோடு டுடே