ஈரோடு நவ 16:

ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதேபோல் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் வேகமாக தாக்கம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினசரி பாதிப்பை விட குறைந்து வருகிறது. நேற்று சுகாதார துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 65 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 692 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 784 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நமது மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் முதியவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

எனவே முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத முதியவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/