ஈரோடு சூலை 5:
கொரொனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது அலையின் போது ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் என பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப்பிடன் இணைந்து 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரோட்டரி சங்கம், பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினர் முயற்சியால் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் ஒரு பிரம்மாண்டமான கொரோனா மருத்துவமனை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 400 படுக்கைகள் கொண்ட நிரந்தர மருத்துவமனை ஒன்று உருவாக்கப்பட்டுவது, இதுவே முதல் முறை என்பதால் ஆசிய அளவில் ஆசியன் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் வெளியாக உள்ளதாகவும், லிம்கா ரெக்கார்டு புத்தகத்தினர் இந்த வாரம் மருந்துவமனையை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா நோய்த்தொற்று காலத்திற்குப் பிறகு இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், இந்த மருத்துவமனையை ரோட்டரி அமைப்பினர் பராமரிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே