சென்னிமலை டிச 31:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை  பெட்ஷீட்டுகள் மற்றும் வீட்டு உபயோகக் துணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறி களில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்தியாவின் 60 சதவீதப் பெட்ஷீட் தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத்தறியில் உற்பத்தியாகும்   பெட்ஷீட்கள் தான் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும் அடைப்பு என்று சொல்லக்கூடிய தரி உரிமையாளர்களும் உள்ளனர்.

அடைப்பு தறி, விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு பெட்ஷீட்களை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். இங்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் பெட்ஷீட் தயாரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறி களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ரூ.2 கோடி பெட்ஷீட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சென்னிமலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஜக்காடு பெட்ஷீட் ஒன்றுக்கு ரூ.4 கூலி உயர்வும், 10 -ம் நெம்பர் நூலைப் பயன்படுத்தி தயாராகும் பெட்ஷீட் ஒன்றுக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை ராகத்துக்கு ஏற்றாற்  போல் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று முதல் சென்னிமலை பகுதியில் வழக்கம்போல் விசைத்தறிகள் இயங்கும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து இன்று வழக்கம் போல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியது. https://www.cms.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today