ஈரோடு சூன் 13: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரானா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதைப்போல் 18 முதல் 44 வயது உட்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாட்டால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டது.ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசி வந்துள்ளன. தடுப்பூசி அனைத்தும் அந்தந்த ஆரம்ப சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. இன்று முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 இடங்களில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டது.அதிகாலை 4 மணி முதல் தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். ஈரோடு மாநகர் பொருத்த வரை 10 ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை முதலே 500-க்கும் மக்கள் தடுப்பூசி மையங்களில் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.காலை 6 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகில் உள்ள பள்ளிகளில் இன்று தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களிலும் 200 பேர் வீதம் இன்று மட்டும் 2,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்று தடுப்பூசி போடாதவர்கள் நாளை வரை சொல்லியுள்ளனர். மாநகர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி பணி காாலை 9:30 -க்குள் நிறைவடைந்தது.இதேபோன்று கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இன்று இரண்டாம் டோஸ் செலுத்து கொண்டனர். அவர்கள் முதல் டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்து இரண்டாம் டோஸ் செலுத்தி கொண்டனர். இதைப்போல் கோபி, அந்தியூர், சித்தோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஆனால் அதே சமயம் கோவேக்சின் தடுப்பூசி இன்னும் நம் மாவட்டத்திற்கு வரவில்லை. இதனால் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோசுக் காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே