ஈரோடு சூன் 19: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள், 3.05 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு அதிகாலை 4 மணி அளவில் 15 ஆயிரத்து 600 கோவிஷில்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன. இதனால் நேற்று முன்தினம் புறநகர் மாவட்டங்களில் உள்ள 50க்கு மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் இரண்டாம் டோஸ் போடப்பட்டது.இந்நிலையில் நேற்று  தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படவில்லை. ஆனால் புறநகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் மதியம் 2 மணிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது.இதைத் தொடர்ந்து இன்று 19 ஆயிரத்து 600 தடுப்பூசி வந்தது. இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் 67 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. காலை 6 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மக்கள் அதிகாலை 4  மணி முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் மையத்திற்கு முன் குவிய தொடங்கினர். ஈரோடு மாநகர் பகுதியில் முன்பு 10 மையங்களில் வழக்கமாக 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு, 200 பேருக்கு ஊசி போட்டனர். இன்று 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு அவர்களுக்கு போடப்பட்டது. ஒரு சில மையங்களில் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. இன்று பெரும்பாலும் கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது. நாளையும் தடுப்பூசி போடும் முகாம் தொடர்ந்து நடக்க உள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே