ஈரோடு செப் 16:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்- இன்ஸ்பெக்டர்கள்  55 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த ஜெயரத், நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கும், கவுந்தப்பாடி எஸ்.ஐ., செல்வம் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கும், பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.டு., ராஜசுலோசனா கட்டுப்பாட்டு அறைக்கும், பெருந்துறை மகேஸ்வரி பவானிக்கும், சித்தோடு தைலா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், வீரப்பன்சத்திரம் ஜெயலட்சுமி ஆப்பகூடலுக்கும், கோபி அனைத்து மகளிர் காவல் நிலையம் புஷ்பா பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஆப்பக்கூடல் மதிவாணன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.காஞ்சிகோவிலில் பணியாற்றிய சிவபாலசண்முகம் ஜெயராஜ் ஈரோடு சூரம்பட்டிக்கும், சென்னிமலை துரைராஜ் சித்தோடுக்கும், சித்தோடு விஜயகுமார் வெள்ளித்திருப்பூருக்கும், சித்தோடு மோகனசுந்தரம் ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், வெள்ளோடு முத்துகிருஷ்ணன் கருங்கல்பாளையத்துக்கும், அம்மாபேட்டை கோவிந்தராஜ் ஈரோடு டவுன் கிரைம் பிரிவுக்கும், பர்கூர் ஜான் பொன்னையன் அம்மாபேட்டைக்கும், வெள்ளிதிருப்பூர் முத்துசாமி கோபிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.சித்தோடு தியாகராஜன் பர்கூருக்கும், காஞ்சிகோவில் கிருஷ்ணமூர்த்தி ஈரோடு டவுன் ஸ்டேஷனுக்கும், தாளவாடி பெருமாள் கடத்தூருக்கும், கோபி ஜுப்ளி ராஜ் ஈரோடு எஸ்.பி., ஆபீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டனர்.மேலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் சந்திரகுமார் அம்மாபேட்டைக்கும், வாசுகி சக்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், செல்வகுமார் ஈரோடு போலீஸ் நிலையத்திற்கும், சின்னசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்திற்கும், ராஜமாணிக்கம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், ரத்தினம் தாளவாடி போலீஸ் நிலையத்திற்கும், கருங்கல்பாளையம் கனகராஜ் பவானிக்கும், ஆப்பக்கூடல் சரண்யா பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தாளவாடி விஜயின் கோபிக்கும் மாற்றப்பட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/