ஈரோடு நவ 1 :

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதுவரை 6 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 7- வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாமில் பங்கேற்று லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி  கொண்டுள்ளனர். 7- வது கட்ட தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் 531, இரண்டாம் நாள் 558 என மொத்தம் 1089 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் தலா ஒரு மையம் வீதம் 60 மையங்கள், நான்கு சிறப்பு மையங்கள், 40 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையம் என 104 மையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மாநகரில் வீடு வீடாகச் சென்று கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தி முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்கள் சேகரித்து அங்கு நேரடியாக வீட்டில் சென்று தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறாக  இரண்டு நாட்கள் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 14 ஆயிரத்து 839 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 27 ஆயிரத்து 182 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/