ஈரோடு சூன் 9: ஈரோடு அருகே சித்தோட்டில், கோவையில் இருந்து சேலம் செல்லும் 4 வழிச்சாலையும் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையும் இணைக்கும் சேவை சாலையில் ரூ.30 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.இப்பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். ஈரோடு மற்றும் சித்தோடு வழியாக வரும் வாகனங்கள் கோவை மற்றும் சேலத்துக்கான 4 வழிச்சாலையில் செல்வதற்கான சேவை சாலை கடந்த 15 ஆண்டாக மோசமாக, மண் சாலையாக காணப்படுகிறது.இச்சாலைக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு 850 மீட்டர் நீளத்துக்கு 5.5 மீட்டர் அகலத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி நிறைவானால் சேலம், கோவை 4 வழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லும்.இப்பணியை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு போதிய எண்ணிக்கையில் மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார்.
நிருபர்.
ஈரோடு டுடே