ஈரோடு நவ 13:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வருவாய்த் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 330 பயனாளிகளுக்கு 39.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்குவது தினசரி அதிகாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களை சந்திக்கின்ற போது சாக்கடை தண்ணீர் சாலை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை கேட்டு மனுக்களை அளிக்கின்றனர். இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். https://www.tenkasi.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/