ஈரோடு டிச 30:
ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 31ம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும்.
11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்கள் விளக்கங்கள் தெரிவிப்பார்கள்.
எனவே, விவசாய பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டார். https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today